தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு தளபதி 68 திரைப்படத்தை அட்லீ, தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி ஆகியோரில் ஒருவர் இயக்குவார்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக 19 வயது நிரம்பிய நடிகை கீர்த்தி செட்டி நடிகை இருக்கிறாராம். உப்பேனா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி ஷெட்டி தன் முதல் படத்திலிலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தமிழ் சினிமாவிலும் கீர்த்தி செட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் தற்போது அவர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக வெளிவந்த தகவல் தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.