தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு தான் நடித்த பல நல்ல  திரைப்படங்களின் மூலம் முன்னணி ஹீரோயினாக உயர்ந்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் நிலையில், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி மற்றும் பர்கானா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இது பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று கூறிவிட்டார். அதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை நயன்தாராவுக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் அடுத்த சூப்பர் ஸ்டார் கிடையாது என்று கூறியுள்ளார்.