தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை காவியா தாப்பர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடந்தபோது எதிர்பாராத விதமாக படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விஜய் ஆண்டனி நீரில் மூழ்கினார். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார்.
இந்நிலையில் நடிகை காவியா தாப்பர் பிச்சைக்காரன் 2 படத்தின் சூட்டிங் சமயத்தில் நடந்த விபத்து குறித்து தற்போது பேசியுள்ளார். அதாவது எதிர்பாராத விதமாக படகு மோதியதால் விஜய் ஆண்டனி தண்ணீரில் விழுந்து தத்தளித்துள்ளார். அப்போது விஜய் ஆண்டனியை நடிகை காவியா தான் தண்ணீருக்குள் விழுந்து காப்பாற்றியுள்ளார். உடனே பட குழுவும் அங்கு வந்தது. விஜய் ஆண்டனியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் நடிகை காவ்யாவுக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மூக்கில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் சரியானாலும் மூக்கில் இருக்கும் தழும்பு மட்டும் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். மேலும் இந்த விபத்தால் மரணத்தின் எல்லை வரைக்கும் சென்று வந்ததாக நடிகை காவியா கூறியுள்ளார்.