தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கும் நிலையில் நடிகர் விஜயின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படங்களாகவே அமைந்துவிடும். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 48 வயதாகும் நடிகர் விஜய் இன்னும் ஃபிட்டாக காணப்படுகிறார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜயின் அம்மா சோபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு சோபா நடிகர் விஜய் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் இரண்டு தோசைகள் சாப்பிடுவார் என்றும் தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் இந்த வயசிலும் பிட்டாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று சோபா கூறியுள்ளார்.