நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ருத்ரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக டைரக்டர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் விஜய் டிவி பாலாவிற்கு, ராகவா லாரன்ஸ் மேடையில் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.