பாஜக கட்சியின் முக்கிய பிரமுகரும், நடிகையுமான குஷ்புவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் சொன்னது போல் ப்ளூ காய்ச்சல் மோசமாகிவிட்டது. அது என்னை பாதித்துவிட்டது.

தற்போது அதிக காய்ச்சல், உடல் வலி, உடல் பலவீனம் ஆகியவற்றால் சோர்வடைந்தேன். சிறிதாக அறிகுறி தெரிந்தாலும் கவன குறைவாக இருக்க வேண்டாம். நான் குணமடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் குஷ்புவின் இந்த பதிவை பார்த்த அவரின் ரசிகர்கள் விரைவில் நீங்கள் குணமடைய வேண்டும் என பதிவிட்டு வருகிறார்கள்.