ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர் கில் சிறப்பாக ஆடி வருகிறார். ரோகித் 35 ரன்களில் நடையை கட்டிய போது கில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டார்.

அவருக்கு ஜோடியாக புஜாரா (42) சிறப்பாக ஆட இந்த ஜோடி 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகிறது. கில் 102 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இந்தியா சற்று முன் வரை முதல் இன்னிங்சில் 186/1 என்ற வலுவான நிலையில் ஆடி வருகிறது.