ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் (39). இவர் முதல் தர போட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். கடந்த 22 வருடங்களாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் தர போட்டியில் ஆடிவந்த ஷான் மார்ஷ், கடந்த ஆண்டு அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக 73 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள ஷான் மார்ஷ், தொடர்ந்து டி20 லீக்குகளில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.