கடந்த சில தினங்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற உணவு போன்றவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு தனி மனித சுகாதாரம் கற்றுத்தர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டைபாய்டு அறிகுறிகள் என்னென்ன?

# உடல் சோா்வு

# கடும் காய்ச்சல்

# பசியின்மை

# தலைவலி

# வயிற்றுப்போக்கு

# வாந்தி

# மயக்கம்

# தொண்டை வலி

# உடலில் தடிப்புகள்

# வயிற்று உபாதைகள்