கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  15 லட்சம் தருகிறேன் என்று பொய் கூறிவிட்டு, 15 ரூபாய் கூட  கொடுக்காதவர்கள்…   ஸ்மார்ட் போன் தரேன்,  வாஷிங் மெஷின் தரேன்னு வாயில் புரூடா விட்டவர்கள் எல்லாம்,  நம்முடைய திட்டத்தை விமர்சிக்கிறார்கள்.

இல்லம் தேடி கல்வி ,எண்ணும் எழுத்தும், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 என்று ஆரம்பித்து…. இந்த 26 மாதங்களில் 260-க்கும் அதிகமான திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தந்துள்ளார்கள். இந்த ஒவ்வொரு திட்டங்களுடைய தூதுவர்களாக…  அம்பாசர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவினுடைய நம்பிக்கையாக…. ஒரே நம்பிக்கையாக…  ஒற்றை நம்பிக்கையாக…. நம்முடைய தலைவர் அவர்கள் இருந்து கொண்டு இருக்கின்றார்கள். அதனால் தான் மத்திய பிரதேசத்தில்  நடக்கின்ற பாஜக கூட்டத்தில்….  நம்முடைய பாரதப் பிரதமர்,  ஒன்றிய பிரதமர் திரு மோடி அவர்கள் திமுகவை  விமர்சித்து பேசிட்டு இருக்கிறார்.

எங்க போனாலும் அவருக்கு திமுக நியாபகம் தான்.  திமுகவுக்கு வாக்களித்தால் கலைஞர் குடும்பம் மட்டும் தான் பயனடையும் என்று ஒன்றிய பிரதமர் திரு மோடி அவர்கள் கூறுகின்றார்கள். 2014 ஆம் ஆண்டிலும், 2019 ஆம் ஆண்டிலும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து பாஜகவுக்கு மக்கள் வாக்கு அளித்தார்கள். ஆனால்  பயனடைந்தது யாரு ?  உங்களுடைய நெருங்கிய நண்பர் திரு அதானி அவர்கள் தான் என தெரிவித்தார்.