திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிங்கராயர் சொன்னார்…..  மூன்று பெரிதா ? 97 பெரிதா என்றார். நீங்கள் இயல்பாக 97 பெரிது என்றீர்கள்…  மூன்று சிறியது.  மூன்று சதவீதமாக இருக்கிற பார்ப்பனர்கள் சிறுபான்மையினர்.. 97 சதவீதமாக இருக்கிற பார்ப்பனர் அல்லாதவர்கள் பெரும்பான்மை. இது பெரியார் பார்வை.

ஆனால் அவன் அந்தப் பார்வை மக்கள் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக கையாளுகிற பார்வை தான் இந்துத்துவா பார்வை.. இந்துக்கள் பெரும்பான்மை,  இந்துக்கள் அல்லாதவர்கள் சிறுபான்மை.  அவன் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று பார்க்கவில்லை. நாம் தான் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று பார்க்கிறோம். அதனால் பிராமணர் 3 சதவீதம் தான்,  அவன்  சிறுபான்மை தானே என்று நாம் கருதுகிறோம். அனால் அவர்களின் அரசியல் இந்துக்கள் – இந்துக்கள் அல்லாதவர்கள் என்கிற அரசியல்

தன்னையும் இந்துவாக இணைத்துக் கொள்கிறான். ஒ.பி.சி (OBC )-யோடு இணைத்துக் கொள்கிறான். எஸ்.சி, எஸ்.டி (SC /ST )- யோடு இணைத்துக் கொள்கிறான். நீயும் இந்து – நானும் இந்து நாம் இந்துக்கள் என்று பார்ப்பனர்கள் தங்களை இந்துக்கள் என்கிற போர்வைக்குள்  ஒழித்துக் கொள்கிறார்கள், ஒளிந்து கொள்கிறார்கள்…  பதுங்கிக்கொள்கிறார்கள்… பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

பார்ப்பனர்களை தனிமைப்படுத்துவது என்பது புத்தர் காலத்தில் இருந்து நிகழ்ந்து வருகிற ஒரு அரசியல். பௌத்தம் பார்ப்பனியத்திற்கு எதிரான கோட்பாடு. சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் ,என்பது தான் பௌத்தம். இவை மூன்றுக்கும் எதிரானது தான் பார்ப்பனியம் என தெரிவித்தார்.