செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும்,  எங்கே பார்த்தாலும் இன்றைக்கு போராட்டம். இப்பதான் நல்ல வேலைக்கு ஊடகம் – பத்திரிக்கையும் போராட்டத்தை பத்தி காட்டுறீங்க. ஊழலை பத்தி  சொல்லிட்டு இருக்கீங்க .ஆங்காங்கே நடக்கின்ற சம்பவங்களை ஊடகத்தின் வாயிலாக…  பத்திரிக்கையின் வாயிலாக காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இப்ப கூட முதலமைச்சருக்கு தெரியல..

அரசுக்கு எதிராக  நிறைய போராட்டங்கள்  நடந்து கொண்டு இருக்கு.  இப்பதான் IT , ED -லாம்  வந்து இருக்குது. இன்னும் நிறைய சரக்கு வெளிவரும். அப்போ வருகின்ற பொழுது பத்திரிகையாளர்களும்…. ஊடக நண்பர்களும்….  தயவுசெய்து உண்மை செய்தியை மக்களுக்கு சென்றடைய செய்யுங்க, அதுதான் என்னோட பணிவான வேண்டுகோள்..

பத்திரிக்கை – ஊடக நண்பர்கள் தான் முக்கியம். மக்களுக்காக நீங்கள் சேவை செய்கிறீர்கள். என்ன நடக்கிறதோ ? நடக்கின்ற உண்மையை நீங்க சொல்லுங்க. வேற எதையுமே கூட,  குறைச்சி சொல்ல தேவையே இல்லை. அத நீங்க சொன்னீங்கன்னா போதும்,  மக்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். பத்திரிக்கை என்பது ஒரு புனிதமான நிறுவனம். பத்திரிக்கை ஊடகம் உண்மை செய்தி போடுங்க. உண்மை செய்தி போட ஆரம்பிச்சுட்டீங்க… அதனால பாராட்டு.

ஆளுகின்ற கட்சி இருக்கும் போது எங்கள போட்டு வாட்டி   எடுத்தீங்க. இப்போ  எதிர்க்கட்சியா இருக்கும் போது வாட்டி எடுத்தீங்க. ஒரு இருபது நாளா தான் எங்களுக்கு மகிழ்ச்சியா இருக்குது, பரவால்லப்பா… நம்ம தமிழ்நாட்டுல ஊடகமும் – பத்திரிகையும் ஓரளவுக்கு நேர்மையான கருத்து தெரிவிக்கிறாங்க. ஆளுகின்ற கட்சியில் ஏற்படுகின்ற  ஊழல்கள்,  பிரச்சனையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கீங்கன்னு நினைக்கிறீங்க, அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.