இங்கிலாந்தில் 85 வயது மூதாட்டி உலகின் அதிவேக ஜிப் லைனில் பயணித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி சிறுவயதிலிருந்தே தன்னை பல சாகசங்களில் ஈடுபடுத்தி வளர்ந்துள்ளார். வயது முதிர்ந்தாலும் அவரின் ஆசைகள் முதிர்வு பெறவில்லை.

இந்த நிலையில் அவர் இங்கிலாந்தில் பென்ரியல் நகரில் உள்ள உலகின் அதிவேக ஜிப் லைனில் பயணித்துள்ளார். இளம் வயதினரே சற்று தயங்கும் அந்த சிப்லைன் சாகசத்தில் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து அசத்தியிருக்கின்றார். அவரது மகள் ஜூலியட்டும் உடன் பயணித்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியதால் மூதாட்டியின் சாகசத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.