ஜப்பானில் உள்ள வெந்நீர் நீரூற்றுகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை 30 ஆண்டுகளாக ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. குளிர் நாடான ஜப்பானில் முக்கிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வெந்நீர் நீரூற்றுக்கள் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடியில் இருக்கும் எரிமலை செயல்பட்டால் இந்த வெந்நீர் நீரூற்றுக்கள் உருவாகியுள்ளன. ஜப்பான் நாட்டு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வெந்நீர் நீரூற்றுக்கு வருவதை  வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண்கள் குளிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்தது தொடர்பாக மருத்துவர் ஒருவர் உள்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். மருத்துவரிடம் நடத்திய விசாரணையில் 30 ஆண்டுகளாக நாடு முழுவதிலும் உள்ள பல நீரூற்றுகளில் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.