ஜப்பான், இந்தோனேஷியா, ஜாம்பியா போன்ற உலகெங்கிலும் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே மாதவிடாய் விடுப்பு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக ஸ்பெயின் அரசும் இதில் இணைந்துள்ளது.  மாதவிடாய் காலங்களில் கடுமையான வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் சட்டத்துறை இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இது போன்ற சட்டத்தை முன்னெடுத்த முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை பெற்றது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக 185 வாக்குகளும், எதிராக 154 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட து. இந்த விஷயத்தில் ஒரு தடையை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளது.