ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வழிவகை செய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மசோதா மாதவிடாய் நாட்களில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மேலும் இது தகுந்த வாக்கெடுப்புக்கு பின்னரே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு 154 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் 185 பேர் ஆதரவாகவும் 3 பேர் வாக்களிக்காமலும் இருந்துள்ளனர். இந்த மசோதா பிரதமர் பெட்ரோ சான்செசின் சோசலிச அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இதுவரை மாதவிடாய் விடுமுறை ஜப்பான், இந்தோனேசியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதா ஐரோப்பிய நாடுகளில் இதுவரை எடுத்ததே இல்லை. அந்த வகையில் பார்க்கும்போது இந்த பெருமையை பெற்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.