துருக்கியில் மீட்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் மறையாதை செலுத்தினார். பாதிக்கப்பட்ட துருக்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மெக்சிகோவில் இருந்து ராணுவ வீரர்களுடன் மீட்பு படையைச் சேர்ந்த 16 நாய்கள் மீட்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டன.

அதில் பிரோடியா என்ற மோப்பநாய் கடந்த வாரம் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தது. இந்த நாய் இரண்டு பேரை உயிருடன் மீட்பதற்கு உதவியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.