மேஷம் ராசி அன்பர்களே…! தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கிட்டும். ஒத்துழைப்பு கூடும் நாளாக இருக்கும். குழந்தைகளிடம் சிரித்து பேசி மகிழ்வீர்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சிறப்புக்கள் ஏற்படும் நாளாக அமையும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். படிப்படியாக உங்கள் பணிகள் எல்லாம் சரியாக கூடும். தம்பதியருக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை அகலும். பிரிந்து இருந்திருக்கக் கூடிய குடும்பம் ஒன்று சேரும். நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். சிரித்த முகத்துடன் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உற்சாகம் பொங்கும்.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.