தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும்.

தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயலில் ஈடுபடுங்கள். இன்று இறைவழிபாடு என்பது கண்டிப்பாக வேண்டும். நிதானத்தை கடைபிடியுங்கள், முன்னேறிச் செல்லுங்கள்.

தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தீ மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனத்துடன் இருக்கவேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.