கடகம் ராசி அன்பர்களே..!
இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாருக்கும் அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். நிதிநிலைமையை சரி செய்துக்கொள்ள வேண்டும். வேலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். எந்தவொரு பணியிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

குடும்பப் பொறுப்புகளை உணர்ந்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும். தேவை இல்லாத புதிய பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.