மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும். தொழில் தொடர்பாக செலவுகள் உண்டாகும். விலை உயர்வான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நிதானமாக பேசி அமைதியுடன் இருக்க வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.