கடகம் ராசி அன்பர்களே..!
இன்று எதிர்பாராத அளவுக்கு கொஞ்சம் கடினமான சூழல் இருக்கும்.

உடல்வலி இருக்கும், உடல் சோர்வு இருக்கும் அதேபோல் சில முக்கிய பணியில் அலைச்சல் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் பொறுமையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். சிலருக்கு மனதில் கவலைகள் இருந்துகொண்டிருக்கும். புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்க கூடிய விஷயங்களில் யோகம் இருக்கும். சகோதர வகையில் பார்த்து பேச வேண்டும். அவருடைய பேச்சில் கண்டிப்பாக கவனம் வேண்டும். கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்.

குடும்பத்தாரிடமும் அன்பாகவே நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசாங்க வகையில் எதிர்பார்க்கக்கூடிய காரியம் கொஞ்சம் தாமதமாகத்தான் நடந்து முடியும். வியாபாரத்தில் புதியதாக திட்டங்களை தீட்டுவீர்கள், அந்த விஷயங்கள் ஓரளவுக்கு நன்மையை கொடுக்கும்.

புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம் அதாவது பெரிய முதலீடுகளை பயன்படுத்தி எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். நன்மை தீமை பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும். அதாவது தேவையில்லாத மனக் குழப்பமும் இருக்கும். யாருக்கும் என்று நீங்கள் ஜாமீன் கையெழுத்து ஏதும் போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். பண விவகாரங்களில் ரொம்ப கடுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பணம் வாங்கும் போதும் சரி, கொடுக்கும்போதும் சரி நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். நட்பு வகையில் சில பிரச்சினைகள் எழக்கூடும். நண்பரிடம் பேசும் பொழுது எச்சரிக்கையாகவே நடந்துக் கொள்ளுங்கள். சில நேரத்தில் விபரிதமான எண்ணங்கள் தோன்றலாம் பார்த்து கவனமாக இருங்கள். காதலர்கள் எப்பொழுதும் போலவே பேச்சில் கண்டிப்பாக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.

கூடுமானவரை அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பான நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ் பச்சைமான எண்: 2 மற்றும் 7.
த்துநிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.