ரிஷபம் ராசி அன்பர்களே…!இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணம் முடையும் தவிர்க்க முடியாத தான் இருக்கும்.

வேறு வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் கொஞ்சம் கடுமையான சூழல் நிலவும் பார்த்துக் கொள்ளுங்கள். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும். கோபம் இல்லாத பேச்சு அனைவரையும் கவரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவு உற்சாகம் பிறக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளாலும் துணைவியாளும் கொஞ்சம் மருத்துவ செலவுகள் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.பேச்சில் இனிமை சாதுரியத்தால் எளிதில் காரியங்கள் எளிதில் கைகூடினாலும், கோபமான பேச்சை மட்டும் தயவு செய்து விட்டுவிடுங்கள்.

யாரையும் குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். மற்றவர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுதும் ரொம்ப எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பணம் வாங்கும் பொழுதும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். இன்றைய நாள் சந்ராஷ்டமம் தினம் என்பதால், எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். ஆலோசனை பேரில் காரியங்களைச் செய்யுங்கள் அது போதும். பெரிய காரியங்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். இன்று காதலர்களுக்கு ஓரளவே முன்னேற்றமான சூழல் நிலவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல், இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.