சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மணிகண்டன் (42), ஜோதி (27) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெகதீஷ், தஷ்வின், ஹரிஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ஜோதி தனது கணவனைப் பிறந்து தன் பிள்ளைகளுடன் சென்னை மேடவாக்கத்தில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணவன் மணிகண்டனின் அக்கா துளசியின் மருமகன் கிருஷ்ணமூர்த்தியுடன் (38) தகாத உறவில் இருந்துள்ளார்.

இதை அறிந்த மணிகண்டன் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் நேற்று ஜோதியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான் சபரிமலைக்கு சென்று வந்துள்ளதாகும் பிரசாதத்தை தனது பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் நேரில் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு மணிகண்டனை ஜோதி செருப்பால் அடித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து மணிகண்டன் மேடவாக்கம் கூட்ரோடு அருகே இருப்பதை அறிந்த ஜோதி கிருஷ்ணமூர்த்தியுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மணிகண்டன் தான் வாங்கி வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியை சரமாரியாக தாக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் மணிகண்டனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின் காயமடைந்த ஜோதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் ஜோதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.