
சிவகாசி அருகே சகோதரியை காதலித்ததாக கல்லூரி மாணவனை, 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலணியில் வீரமாணிக்கம் (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதற்கு சிறுமியின் சகோதரரான 17 வயது சிறுவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதோடு கல்லூரி மாணவன் வீர மாணிக்கத்திடம் விசாரணை நடத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுமியின் சகோதரர் கல்லூரி மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.