கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிய செயல் தலைவரை நியமித்துள்ளது. அதன்படி புதிய காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பி.என். சந்திரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போதிருந்தே பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.