இந்தியா கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.85,000 கோடி மதிப்புள்ள மொபைல்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. ஆப்பிள் முதல் பல்வேறு மொபைல் நிறுவனங்களும் தங்களது போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டது.

முந்தைய 2021-22ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது  2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி இருமடங்கு உயர்ந்து உள்ளது. இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி போன்ற 5 நாடுகளுக்கு அதிகளவில் மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இந்திய செல்லுலார் எலெக்ட்ரானிக்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.