உலகில் மதிப்புமிக்க திரைப்பட விருதாக இருக்கும் ஆஸ்கார் விருது 2023ம் ஆண்டுக்கானது மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. நடப்பு ஆண்டு நிகழ்ச்சியை 200-க்கு அதிகமான நாடுகளில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும் 95-வது ஆஸ்கார் விருது விழா இந்திய ரசிகர்களுக்கு மார்ச் 13ம் தேதியன்று காலை 5:30 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் பார்வையாளர்கள் இந்த விழாவை பிசி சேனலில் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமின்றி ஆன்லைனில் abc.com (அ) ABC ஆஃப் வாயிலாகவும் பார்க்கலாம். இது YouTube, Direct TV, FUBOTV மற்றும் Hulu Live TV உள்ளிட்ட பல தளங்களில் சந்தாவுடன் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் வருடத்துக்கான ஆஸ்கார் விருதுகளில் “சிறந்த ஒரிஜினல் பாடல்” பிரிவில் இந்தியத் திரைப்படமான ஆர்ஆர்ஆர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது..