நம் நாட்டில் விற்கப்படும் அனைத்துவித பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூபாய்.1.57 கோடி மற்றும் பிப்ரவரி நிலவரத்தின் படி ரூபாய்.1,49,577 கோடி GST வசூல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசானது தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த வருடத்தை விட GST வரி வசூல் 12 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் 49வது GST கவுன்சில் கூட்டம் நடந்தது.

அதில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய GST இழப்பீடு தொகை ஜூன் மாதம் விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இன்று மாநில அரசுகளுக்குரிய GST வரி பகிர்வு தொகை விடுவிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசுகளின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது, GST வரி பகிர்வாகி ரூபாய்.1,40,318 கோடியை விடுத்துள்ளது. அதில் தமிழ்நாட்டிற்கு 14வது தவணையாக ரூ. 5,756 கோடி பகிரப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விடவும் 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.