ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. வில்வித்தையில் பெண்கள் குழு போட்டியில் சீன தைப்பேவை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றது. 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். தற்போது வில்வத்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. ஆசிய போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் 230க்கு 229 என்ற கணக்கில் சீன வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கின்றனர். வில் வித்தை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா, அதிதி, பரணித் கபூர் தங்கப்பதக்கம் வென்றனர்