சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது. பல்வேறு பதக்கங்களை இந்திய அணி குவித்து வருகிறது. இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பேட்மிண்டனில் 2 -3  என்ற கணக்கில் சீனாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பேட்மிண்டனில் சீனாவை எதிர்கொண்ட இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் சீனாவுக்கு எதிராக அடுத்த 3 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் பேட்மிண்டனில் இந்திய அணி வென்ற முதல் வெள்ளி இதுவாகும்.