திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நடிகை சனம் ஷெட்டி விஜய்யின் இந்தச் செயலைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

ஒருவருடைய வாழ்க்கையில் மனைவியின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்றும் விஜய்யின் இத்தகைய போக்கு ஒரு ரசிகையாகத் தனக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகப் பேசி வரும் சனம் ஷெட்டி முதன்முறையாக அவருக்கு எதிராக இத்தகைய கருத்தைத் தெரிவித்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில் சனம் ஷெட்டியின் இந்தத் திடீர் விமர்சனம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

விஜய்யின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட ஒருவரே இவ்வாறு விமர்சனம் செய்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.