நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதே தனது மன உளைச்சலுக்கும் இந்த முடிவிற்கும் காரணம் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் கட்சி அறிவிப்பு மற்றும் சினிமா தொடர்பான முக்கிய நிகழ்வுகளில் சங்கீதா பங்கேற்காமல் லண்டனில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், சென்னையில் இன்று நடைபெற்ற சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழாவில் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டது பேசுபொருளாகியுள்ளது.

இருவரும் ஒரே காரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சங்கீதா விவாகரத்து வழக்குத் தொடந்துள்ள நிலையில், பொது நிகழ்ச்சியில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாகத் தோன்றியது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.