
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வட மாநிலங்களில் இவர் பேசியது பெருமளவில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் உதயநிதிக்கு எதிராக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி கூட இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளது. நான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில், தமிழக – தேசிய அரசியல் அரங்கில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சை குறிப்பிட்டு பேசிய மக்களவை உறுப்பினர் ஆ. ராசா உதயநிதி ஸ்டாலின் கூட சனாதனத்தை மென்மையாகத்தான் பேசினார். ஆனால் அருவருக்கும் நோயாக உள்ள தொழுநோய் மற்றும் எச்ஐவிக்கு இணையானது ”சனாதனம்” என்ற வகையில் ஆ.ராசா பேசிய பேச்சு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆ.ராசா பேசிய பேச்சுக்களை வட மாநில ஊடகங்கள் பிரேக்கிங் செய்தியாக தொடர்ந்து போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் சமூக ஊடகமான ட்விட்டர் எக்ஸில் #ArrestARaja , #Arrest_Udayanidhi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி ஆகி வருகிறது.
#Udayanidhi_Stalin and#ARaza told the eternal Sanatan Dharma as a disease!
Insulting scientific Sanatan culture equipped with Vedas and Puranas is blasphemy! So #Arrest_Udayanidhi#ArrestARaja and Hindus unite for #HinduRashra to stop such rubbish!
Wake up #Hindus ! pic.twitter.com/6PvCsWqTLH— Shobhana Malaviya 🚩 🇮🇳 (@ShobhanaMalaviy) September 7, 2023