மராட்டியத்தில் உள்ள புனே நகரில் சின்ச்வாத் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவருக்கும் காரில் வந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில், காரில் இருந்தவர்கள் பைக் ஓட்டுனரை, காரின் முன் பக்கத்தில் வைத்து 2 கிலோமீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காரில் பயணித்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு குற்றவாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரித்து, அவர்கள் மது குடித்து இருக்கிறார்கள்? இல்லையா? என்ற ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மராட்டியத்தில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பிம்ப்ரி சின்ச்வாத் பகுதியில் உள்ள சாலையின் தடுப்பின் மீது மோதி விபத்தில் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.