உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சோகன்லால் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அமோதியைச் சேர்ந்த லால் பகதுர் யாதவ் என்பவரின் மகளுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருமணத்திற்கு சம்பந்தம் கூறிய சோகன்லால், அதன் பின் வரதட்சணையாக கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பின்பு கார் வேண்டாம், பணமாக வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு மணப்பெண்ணின் வீடாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்பின் திருமண வேலைகளையும் செய்யத் தொடங்கினார். இதையடுத்து கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சோகன்லால் காணாமல் போகியுள்ளார்.
அவரது செல்போனுக்கு தொடர்பு கொள்ளும்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது மணமகனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருப்பினும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்போவதாக கூறியதால், நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். ஆனால் பெண் வீட்டார் இதற்கு சம்மதிக்கவில்லை.
அவரை பணைய கைதியாக பிடித்துச் சென்றனர். திருமணத்திற்கு செலவான பணத்தை அவர் திருப்பி தர வேண்டும் என்றும், அதன் பின்னரே அவரை விடுவிப்போம் என்றும் அவர்கள் கூறினர். அதே சமயம் மோகன்லால் யாதவ் தனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இருப்பதாகவும், பெண் வீட்டார் தான் பிரச்சனை செய்வதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் பெண் வீட்டார் தங்கள் முடிவிலிருந்து பின் வரவில்லை. இதுகுறித்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையையும் பலன் அளிக்கவில்லை. தற்போது வரை மணமகன், மணப்பெண் வீட்டாரின் பிடியில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.