ஒடிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் ஒரு காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சமூக மரியாதைகளை மீறி, பொது இடத்தில் காதல் வெளிப்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வீடியோவில், ஒரு மோட்டார் சைக்கிளில் காதலன் பைக்கை ஓட்ட, காதலி பைக்கின் எரிபொருள் டேங்கில் எதிர் திசையில் அமர்ந்து, அவனை கட்டிப்பிடித்து, பொதுவெளியில் ரொமான்ஸ் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த ஜோடி, ஹெல்மெட் அணியாமலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமலும், சாலையில் செல்வோரின் பாதுகாப்பை புறக்கணித்து, தங்கள் காதல் உலகில் மூழ்கியிருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
News Flash 🔴 କୁଣ୍ଢାକୁଣ୍ଢି ହୋଇ ଚଳନ୍ତା ବାଇକ୍ରେ ଚାଲିଥିଲା ରୋମାନ୍ସ୍❗୧୩ ହଜାର ଚାଲାଣ କାଟି ଦେଲା STA❗ଲାଜ ସରମ ଭୁଲି ଭୁବନେଶ୍ଵର ରାଜରାସ୍ତାରେ ବେକାବୁ ହେଲେ ପ୍ରେମୀ ଯୁଗଳ, ଭାଇରାଲ୍ ହେଲା ଭିଡିଓ ଆଉ କଟିଗଲା ୧୩ ହଜାର ଟଙ୍କାର ଫାଇନ୍ #ONL #romance #bikers #boyfriend #girlfriend #Bhubaneswar #Fine #Odisha pic.twitter.com/U06JyUpCu3
— OdishaNewsLive (@OdishaNews_Live) August 17, 2025
இந்த சம்பவம் புவனேஸ்வரின் உயர்நிலைப் பகுதியான இன்ஃபோசிட்டியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஜோடி, காவல் நிலையத்தின் முன்பாகவே இத்தகைய அபாயகரமான சாகசத்தை செய்து சென்றுள்ளனர், ஆனால் அவர்களை யாரும் தடுக்கவில்லை.
புவனேஸ்வரின் தெருக்களில் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும்,இவ்வளவு கடுமையான போக்குவரத்து கண்காணிப்பு இருப்பதாகக் கூறப்படும் நகரத்தில், இந்த ஜோடி எப்படி இப்படி சர்க்கஸ் செய்து தப்பித்தது? காவல்துறை, “காதலில் இவ்வளவு நடக்கத்தான் செய்யும்” என்று விட்டுவிட்டதா, அல்லது சிசிடிவி ஆபரேட்டர் பாப்கார்ன் சாப்பிட்டபடி இந்த வைரல் வீடியோவை ரசித்துக் கொண்டிருந்தாரா? எதுவாக இருந்தாலும், இந்த சம்பவம் புவனேஸ்வரின் போக்குவரத்து அமைப்புபின் கவனமின்மையை தெளிவாக எடுத்து காட்டுகிறது.
