தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகும் நிலையில் படத்தில் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கலாம். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் வீடியோவில் மனுஷன் பொறக்கும் போதே பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா போன்ற டயலாக்குகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.