தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஹரி. இவர் ஆறு, சிங்கம், யானை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் ஹரி தற்போது புதிதாக சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் குட் லக் ஸ்டுடியோவை தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு மற்றும் மனோ தங்கராஜ் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

இந்த திறப்பு விழாவின் போது பிரீத்தா மற்றும் ஹரி தன்னுடைய மகன்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஹரிக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் நிலையில் ப்ரீத்தா-ஹரி தம்பதிக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.