அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், அதிமுக மதுரை மாநாட்டு அன்னைக்கு நான் சிவகாசியில் இருந்து இங்க வந்துட்டு இருந்தேன்.  தஞ்சாவூருக்கு வர வழியில்,,, குறிப்பாக தஞ்சை மாவட்டம்,  புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்த வண்டிகளில்…  ஒரு வண்டியில 10 பேர் கூட இல்ல, இதுதான் உண்மை.

அவங்க சொன்னது 20 லட்சம் பேர், 25 லட்சம் பேர் என்று… சைவர் அதிகமா போட்டு சொல்லிட்டாரு. பூஜ்ஜியத்துக்கு வேல்யூ உண்டு என்றது இப்ப, அந்த பூஜ்யங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.அதிமுக மதுரை மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் புளியோதரை நடிகர்கள் மாதிரி மேடையில நின்னு டான்ஸ் ஆடுறாங்களே தவிர,  சண்டை போடறாங்களே தவிர, தமிழ்நாட்டு மக்களின் பணத்தை உண்டு கொழுத்தவர்கள்….

ஒரு புளியோதரை கூட கொடுக்க தெரியாத… கொடுக்க முடியாத….. கொடுக்க மனம் இல்லாத…. நிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களிடம் ஆட்சியை கொடுத்தால்  அரிசி வேகாத மாதிரி இந்த அறவேக்காடுகள் இருப்பார்கள். அரிசி வேகாதது எதை காட்டுதுன்னா….  இவங்க எல்லாம் அரவேக்காடு. இவர்கள் எல்லாம் அம்மாவின்  கட்சியையும், அம்மாவின் சின்னத்தையும்…  புரட்சித்தலைவர் பயன்படுத்திய சின்னத்தையும் வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். வருங்காலத்திலே அவர்களால் ஏமாற்ற முடியாது என்பதை உணர செய்கின்ற விதமாக… மதுரை நீதி விளைகின்ற பூமி என தெரிவித்தார்.