
புது ஓய்வூதியத் திட்டத்துக்காக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் வாயிலாக 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயம் பெறுவார்கள்.
மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு கூட்டத்துக்கு பின், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் பேசியதாவது “அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் அதிகரிப்பால் வருடத்திற்கு 12,815.60 கோடி ரூபாய் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.