நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன் மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.

அதன் பிறகு மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு ஏற்கனவே ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ சான்றிதழ் விடுப்பு, நிலுவை இல்லா விடுப்பு என பல விடுப்புகள் நடைமுறையில் இருக்கிறது என்று கூறினார்.