சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பணம் வாங்கிக்க்கொண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்ற பிரிவு காவல்துறையானது விசாரணையையும்,  விளக்கங்களையும் கேட்டு வருகின்றார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவர் ரீதியான ஒரு மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, இதில் ஏ.ஆர் ரகுமானுடைய நிகழ்ச்சி நடத்த இருந்ததாகவும், அதற்காக முன் தொகையாக 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், முறைப்படி அனுமதி வாங்காததால் நிகழ்ச்சி  ரத்து செய்யப்பட்டது.

பிறகு அந்த பணத்தை திரும்ப கேட்ட போது, பணத்தை முறையாக கொடுக்கவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் ஏ.ஆர் ரகுமான் தரப்பில் இதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரகுமானின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்குடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக புகார் தாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. 10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு ஏ ஆர் ரகுமான் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும்  பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஏ.ஆர் ரகுமான் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.