சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை காவல்துறை கெடு விதித்துள்ளது.

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் என்பது நடைபெற்று வருகிறது. மூன்று சங்கங்கள் மூன்று விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று  தங்களுடைய பணிக்காக காத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  சங்கத்தினரிடமும், அதே போன்று பகுதி நேர ஆசிரியர்களிடமும்  காவல்துறை தரப்பில் தற்போது முதல் கட்ட பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டு வருகிறது .

கடந்த ஆறு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில்  இன்று இரவு 8 மணிக்கு முன்பாக இந்த போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தரப்பில் துறையினுடைய செயலாளர்கள்,    இயக்குனர்,  அமைச்சர் என அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவல்லிக்கேணியினுடைய துணை ஆணையர் சேகர் தேஷ்முக் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தெரிவிக்கும்போது,  மேலும் மூன்று ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாகவும்,  தொடர்ச்சியாக போராட்டங்களை அனைத்து சங்கங்களும் நடத்தினால் சட்ட ஒழுங்கு பாதுகாப்பை எவ்வாறு மேற்கொள்வது என்றும், கடந்த 9 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில்,  பள்ளி கல்வித்துறை தரப்பில் தெளிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு,  அவர்கள் இதற்கான தீர்வுகளை தெரிவித்து இருக்க கூடிய சூழ்நிலையில் போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெட் ஆசிரியர்கள் இன்று மாலை மீண்டும் தனியாக அமைச்சரை சந்தித்து,  தங்களுடைய கோரிக்கை வைத்திருப்பதாகவும், அமைச்சர் இன்று இரவு 8 மணிக்கு முன்பாக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி,  இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்ததாக  சங்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று இரவுக்குள்ள போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு,  காவல்துறை தரப்பில் பகுதி நேர ஆசிரியர் சங்கத்தியாரிடமும்,  டெட்  ஆசிரியர் சங்கத்தினரிடமும் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரவு எட்டு மணிக்கு முன்பாக இந்த போராட்டத்தை கைவிடுமாறு தெரிவிக்கப்பட்டு வருகிறது.