ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒரு சரித்திர திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நேற்று ஏப்ரல் 7 ஆம் தேதி சுதந்திர காலக் கதையுடன் “ஆகஸ்ட் 16, 1947” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகியுள்ளது. அதன்பின் வரும் ஏப்ரல் 14-ம் தேதி சமந்தா நடித்திருக்கும் “சாகுந்தலம்” என்ற தெலுங்கு திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

வரும் ஏப்ரல் 21ம் தேதி ஏழாம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான “யாத்திசை” திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி சோழர்களின் வரலாறை மையமாக கொண்ட சரித்திர திரைப்படமான “பொன்னியின் செல்வன் 2” படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.