தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 20 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவதற்கான ஆணையையும்,  அதேபோல 1895 பேர் கௌரவ விரிவுரையாளராக நியமிப்பதற்கான உத்தரவினை வழங்கி இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

10 ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டதிலே பல்வேறு முறைகேடுகள் அந்தந்த கல்லூரிகளிலேயே அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இட ஒதுக்கீடுகள் எல்லாம் சரியாக பின்பற்றப்படவில்லை. ஆகவே இதை எல்லாம் அறிந்து தான் தமிழக முதல்வர் அவர்கள் 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

சமூக நீதியின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்கள்  நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழகம் முழுவதும் அவர்களுடைய விண்ணப்பங்கள் எல்லாம் பெறப்பட்டு,  பாடவாரியாக முறைப்படுத்தப்பட்டு 1895  பேர்களுக்கு  சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.