பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வீட்டில் சூரிய மின்சார வசதியை பொருத்துபவர்களுக்கு அரசாங்கம் 30 ஆயிரம் ரூபாய் (1 KW), 60 ஆயிரம் ரூபாய் (2 KW), 78 ஆயிரம் ரூபாய் (3 KW) என மானியம் வழங்க உள்ளது. இதற்கு https://pmsuryaghar.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். சூரிய திட்ட பணிகள் நிறைவடைந்த ஏழு முதல் 30 நாட்களுக்குள் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.