மெய்தி சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீக்க மணிப்பூர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது ஹைகோர்ட். மணிப்பூர் வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த முந்தைய உத்தரவில் மாற்றங்களை செய்தது உயர்நீதிமன்றம். குக்கி மற்றும் மெய்தி இனத்தவர் இடையே ஏற்பட்ட வன்முறையால் ஏராளமானோர்  உயிரிழந்தனர்.

மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் கலவரம் வெடித்தது. மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில் மணிப்பூர் உயர் நீதிமன்றம் தனது உத்தரவை திரும்ப பெற்றுள்ளது