அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார் அட்டை புதுப்பிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் நீல ஆதார் அட்டை என்றால் என்ன? அது யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற கேள்வி பலரிடையே எழுகிறது. நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சிறப்பு அட்டை வழங்கப்படுகிறது. நீல நிறத்தில் இருப்பதால் அதற்கு நீல ஆதார் அட்டை என்று பெயர். இது சாதாரண ஆதார் அட்டையில் இருந்து வேறுபட்டது. பெரியவர்கள் போலல்லாமல், குழந்தைகளுக்கு கார்டுகளை வழங்க பயோமெட்ரிக் தரவு தேவையில்லை என்று UIDAI தெரிவித்துள்ளது.