தமிழகத்தில் புதியதாக  மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதற்காக 2 மணல் குவாரிகள் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் வட்டம் நெரூர் வடக்கு கிராமம் மற்றும் அச்சமாபுரம் கிராம பகுதிகளில் அமைக்க அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது.

அதன்படி நெரூர் வடக்கு கிராமத்தில் இருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு ம 3,21,000 மீட்டர் கியூப், அச்சமாபுரம் குவாரியிலிருந்து 4,80,000  மீட்டர் கியூப் மணல் எடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

அதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெற்றவுடன் புதியதாக குவாரிகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நீர்வளத்துறையால் தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் மணல் குவாரிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.